மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டிய கட்டுரைப்போட்டி முடிவுகள் ආබාධ සඳහා ජාත්යන්තර දිනය පාදක ලිපි තරගයේ ප්රතිඵල
Posted on November 29th, 2018
வவுனியா P.Manikavasagam
மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டி வரோட் என்றழைக்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையம் – வன்னி என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன..
தரம் ஒன்று தொடக்கம் 10 வரையிலான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பிரிவு, உயர்தர வகுப்பு மாணவர்கள் பிரிவு மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான திறந்த பிரிவு என மூன்று பிரிவுகளாக இந்தக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் பரிசுக்குத் தெரிவானவர்களின் விபரங்கள் வருமாறு:
தரம் ஒன்று தொடக்கம் 10 வரையிலான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பிரிவில்
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் அணுகும் வசதிகள் என்ற தலைப்பிலான கட்டுரை எழுதிய வவுனியா பன்றிக்கெய்தகுளம்; அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கஜேந்திரநாத் லாவண்யா முதலாமிடத்தையும் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவபாலன் கரிஸ் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள், அணுகும் வசதிகள் என்ற தலைப்பிலான கட்டுரைக்கு வவுனியா
நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த நிவேதிகா விஜயசிவா முதலாம் இடத்தையும்,
கண்டி தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியைச் சேர்ந்த அப்துல் ரஸாக் பாத்திமா இரண்டாம் இடத்தையும்
கண்டி தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் முஹிபுல்லா பாத்திமா நிவஸ்லா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
மூன்றாம் பிரிவாகிய 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில்
மாற்றுத்திறனாளிகளுக்கான அரச, அரசசார்பற்ற, சமூகத்தின் கடமைகளும், பொறுப்புக்களும்
என்ற தலைப்பிலான கட்டுரைக்கு கொட்டாஞ்சேனை கொலேஜ் வீதியைச் சேர்ந்த
சரவணமுத்து நாகராசா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
வவுனியா உக்குளாங்களம்
மனோகரன் தினுஜா இரண்டாம் இடத்தையும்,
மட்டக்களப்பு, வாழைச்சேனை, கொண்டயன் கேணி யோகராசா யோகதாசன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த கட்டுரைப் போட்டியில்
வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் கி.உதயகுமார்,
வவுனியா. முஸ்லிம் மகாவித்தியாலய ஆசிரியை திருமதி றஸ்மியா,
வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய ஆசிரியை திருமதி வ.ஜெகநாதன் நடுவர்களாகப் பணியாற்றி இருந்தனர்.
ஆக்கங்கள் எழுதி அனுப்பிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும், நடுவர்களாகப் பணியாற்றிய பெருந்தகைகளுக்கும் வரோட் நிறுவனம் தனது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளது.
—
P.Manikavasagam